Sunday, 10 August 2025

அஜித்தின் வில்லன் 2025

 AK 64 திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்கப்போவதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக வரும்பட்சத்தில் கண்டிப்பாக இந்த காம்போ வேற லெவலில் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் பிரபல இயக்குநர்.. அட இவரா, அப்போ வேற லெவல் | Mysskin Is Villian Of Ajith Kumar Ak 64 Movie

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநரும் பிரபல நடிகருமான மிஷ்கின் சமீபகாலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். லியோவில் விஜய்யின் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது/.

Sunday, 3 August 2025

ரசிகர்களை சுயநலத்திற்கு பயன்படுத்த மாட்டேன் அஜித்

ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன் - அஜித்குமார்*

*பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து அஜித் திடீர் அறிக்கை!*

சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்திற்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.

இந்தப் பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்தத் துறைக்கு எந்தப் பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல்தான் நுழைந்தேன். முழுக்க முழுக்க என் சுய முயற்சியால் மட்டுமே சினிமாத் துறைக்குள் நுழைந்தேன். காயங்கள், மீண்டு வருதல், தோல்வி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. ஆனால், நான் தளர்ந்து போகவில்லை. முயற்சி செய்தேன், மீண்டு வந்தேன், தொடர்ந்து முன்னேறுகிறேன்!
ஏனெனில், விடாமுயற்சி என்பதை வெறுமனே நான் கற்றுக் கொள்ளவில்லை. அதை பரிசோதித்து அவ்வண்ணமே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

எண்ணில் அடங்காத அளவுக்கு வெற்றியும் தோல்வியும் சினிமாவில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் வெற்றி மீது நான் சந்தேகம் கொள்ளும்போதும் உங்கள் அன்புதான் என்னை மீண்டு வர செய்துள்ளது. இந்த அன்புக்கு என்றும் உண்மையாக இருப்பேன். இந்த அன்பை எப்போதும் இறுகப் பிடித்திருப்பேன். ஆனால், என் பயணம் சினிமாவோடு முடிந்துவிடவில்லை.

மோட்டார் ரேசிங் உலகில் வேறுவிதமான சவால்களை எதிர்கொண்டேன். அந்த டிராக் நீங்கள் யார் என்பதை பொருட்படுத்தாது, மன்னிக்காது. அதற்கு தேவை Respect, Focus & Grit! அந்த டிராக்கில் பல முறை ரத்தம் வரும் அளவுக்கு விபத்து ஏற்பட்டது. என்னை பலமுறை தூக்கி எறிந்திருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து பயணிக்கிறேன். இந்த பயணம் விருதுகளுக்காகவோ அல்லது தலைப்பு செய்திகளுக்காகவோ அல்ல. ஒழுக்கம், துணிவு மற்றும் ஒரு குறிக்கோளுக்காக ஏற்படும் வலி என இவற்றின் மூலம் என்னை எனக்கே நிரூபிக்க பயணிக்கிறேன். வீரம் மிக்க நாட்டின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன்.

'அஜித்குமார் மோட்டார் ரேசிங்' என்ற பெயரில் 2025 ஆம் ஆண்டு மீண்டும் விளையாட்டுத் துறைக்கு மட்டும் நுழையவில்லை. வயது வரம்பு, அச்சம் ,தடைகள் இதைப்பார்த்து தங்கள் மீதே சந்தேகம் கொள்பவர்களுக்கு உத்வேகம் கொடுக்கவும்தான் விளையாட்டுத் துறைக்குள் மீண்டும் வந்தேன்.

நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான். நன்றி! உங்கள் அன்பை என் சுயலாபத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த மாட்டேன்.

சினிமாவில் எனக்கான பாதையை வடிவமைத்து, வழிநடத்தி, என்னை நம்பி என் வளர்ச்சிக்கு உதவிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், சாட்டிலைட் மற்றும் சமூக ஊடகங்கள், விமர்சர்கள் அனைவருக்கும் நன்றி!

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழகத்தின் மதிப்பிற்குரிய தலைவர்கள் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எனக்கு அன்பாக இருந்த அதிகாரிகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.

எனக்கு மதிப்புமிக்க பத்ம பூஷண் விருது வழங்கி, எனது சமூக மரியாதை மற்றும் பொறுப்பை மேலும் பலப்படுத்தியதற்காக இந்திய ஜனாதிபதி மேடம் திரௌபதி முர்மு, மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன்.

என் வாழ்வின் பலம் மனைவி ஷாலினிதான். எல்லா தருணங்களிலும் அவர் என்னுடன் நின்றிருக்கிறார். என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் இருவரும் என் வாழ்விற்கு அர்த்தம் கொடுத்தவர்கள். சமூகத்தின் மீது அக்கறை கொள்ளும் மனப்பான்மையுடன் என்னை வளர்த்த மறைந்த என் தந்தை பி.எஸ். மணி மற்றும் என் அம்மா மோகினி மணி. என் சகோதரர் மற்றும் என் குடும்பத்தினர் அனைவரின் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி.

நான் பல சமயங்களில் அதிகம் வெளியே வராமலும் பேசமாலும் இருக்கலாம். ஆனால் சினிமா மட்டுமல்ல மோட்டார் பந்தயத்திலும் முழு கவனம் செலுத்தி உங்களை மகிழ்விக்க தவறியது இல்லை.

என் நிறை குறைகள் அனைத்தையும் இந்த 33 வருடங்கள் ஏற்றுக் கொண்டு என் மீது அன்பு வைத்து கொண்டாடியதற்கு நன்றி! உங்களுக்கும் எனக்கும் என்றென்றும் உண்மையாக இருக்க முயற்சிப்பேன். என் மோட்டார் ரேசிங் கரியருக்கும் உங்கள் அன்பும் ஆதரவும் தேவை. உங்களையும் நம் நாட்டையும் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன்.

வாழு, வாழ விடு!

அஜித்குமார்.

Wednesday, 7 May 2025

கூலி திரை விமர்சனம்

 மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது கூலி. 

பட போஸ்டர்கள் பல்வேறு யூங்களை எழுப்பிய நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூலி பூர்த்தி செய்ததா? ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

 மக்கள் கொண்டாடுகிறார்களா? என பல கேள்விகளுக்கு கூலி, கூலி கொடுத்தததா? என்பதை திரை விமர்சனத்தில பார்க்கலாம். 


மன்னன், சின்னதம்பி படங்களை இயங்கிய பி.வாசு இயக்கத்தில் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில் ஆர்.சரத்குமார் நடிப்பில்1995-ம் ஆண்டு வெளியான படம் கூலி. 

இந்த படத்தில் சரத்குமார், மீனா, ராதாராவி, ராஜா மற்றும் கவிதா விஜயகுமார் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.



தொழிலாளர்கள் பிரச்சினையை குடும்ப உறவுகளுடன் அழகாக சொல்லியிருக்கும் படம். 


ராதாரவி ஒரு பணக்கார தொழிலதிபர். ஊதிய உயர்வு கேட்ட தொழிலாளர்களின் போராட்டத்தை பொன்னம்பலத்தைக் கொண்டு சமாளித்து விடுகிறார். பொன்னம்பலம் தொழிலாளர்களை ஏமாற்றுகிறார்.


 எதுவும் செய்ய முடியாமல் தவிக்கும் தொழிலாளர்களுக்காக அவதாரம் எடுக்கிறார் சரத்குமார்.


யூனியன் தலைவராகும் சரத்குமாருக்கும் காத்திருக்கும் சவால்கள் படத்தின் கதை. மீனா இந்த படத்தில் ரொம்பவே அழகாக இருக்கிறார்.  


படத்தின் திருப்பதே சரத்குமாரின் சகோதரி தான். அவர் எடுக்கும் முடிவுகள், பாசப் போராட்டத்தில் சரத்குமார் என பட முழுக்க தனது முத்திரையை பதித்து இருக்கிறார் சரத்குமார்.


படம் பல இடங்களில் இழுவையாக இருப்பதால் சலிப்பு தட்டுகிறது. அதனை கவுண்டமணி-செந்தில் காமெடி சமன் செய்து விடுகிறது. 


பாடல்கள் ரசிக்கலாம், திரைக்கதையை இன்னும் மெருகேற்றி இருக்கலாம். மொத்தத்தில் கூலி கவரக்கூடியவன் தான். 

--------

அஜித்தின் வில்லன் 2025

 AK 64 திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்கப்போவதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது...

பிரபலமானது